ரணில் அதிகாரத்திற்கு வந்தாலும் தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்படுவது சந்தேகம்!

ரணில் அதிகாரத்திற்கு வந்தாலும் தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்படுவது சந்தேகம்!

ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பாரா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகிறது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

”அமெரிக்க தூதுவர், இந்திய தூதுவர் போன்றோரை இணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும்.

அதைவிடுத்து, ஜனநாயகம் எனும் போர்வையின் கீழ் ரணிலை ஆட்சிக்கு கொண்டு வரும் நோக்கில் கூட்டமைப்பு ஐ.தே.க.விற்கு ஆதரவு வழங்கியுள்ளது.

ஆனால், கூட்டமைப்பு விரும்புவது போன்று ரணில் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்படுவது சந்தேகமே.

ஏனெனில் அவர் அதிகாரத்தை பொறுப்பேற்றவுடன் சரியான அரசாங்கம் அமைக்கப்படும் என்றோ அல்லது அவரது செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த எதிர்க்கட்சிகள் இடமளிக்கும் என்றோ உறுதியாக எதிர்பார்க்க முடியாது” எனத் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net