ராகுல் காந்தியின் பொய்கள் அம்பலமாகின!

ராகுல் காந்தியின் பொய்கள் அம்பலமாகின!

ரபேல் போர் விமான ஊழல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் ராகுல் காந்தியின் பொய்கள் அம்பலமாகிவிட்டதென்று மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் எதுவும் நடந்ததற்கான ஆதாரம் இல்லை என்று கூறிய உச்சநீதிமன்றம், விசாரணை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து நேற்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டது.

இது குறித்து முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் ஊடவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தொிவித்த அவர்,

“அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்துகொண்டு சர்வதேச சமூகம் முன் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றஞ்சாட்டினார்.

உச்சநீதிமன்றம் எவ்வித விசாரணையும் இன்றி ரபேல் விமான வழக்கைத்தள்ளுபடி செய்ததன் மூலம் எங்கள் நிலைப்பாடு நிரூபணமாகியுள்ளது.

ராகுல் காந்தி தேர்தலுக்காக பாராளுமன்றத்தில் தவறான தகவல்களை தெரிவித்து நாட்டு மக்களை தவறாக வழிநடத்தியுள்ளார்.

அவரின் பொய்கள் தற்போது அம்பலமாகியுள்ளது. நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்ததற்காகவும், நம் நாட்டின் பெருமையை சர்வதேச சமூகம் முன் சீர்குலைத்ததற்காகவும் நாட்டு மக்கள் முன்பும், பிரதமர் மோடியிடமும் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் மன்னிப்பு கேட்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Copyright © 8935 Mukadu · All rights reserved · designed by Speed IT net