அரசியல் ரீதியில் இராஜதந்திர அரசியலையே நாம் பின்பற்றுகின்றோம்!

அரசியல் ரீதியில் இராஜதந்திர அரசியலையே நாம் பின்பற்றுகின்றோம்!

அரசியல் ரீதியில் இராஜதந்திர அரசியலையே நாம் பின்பற்றுகின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“சிங்கள குடியேற்றம் தொடர்பில் அந்தந்த காலங்களில் இருந்த ஆட்சியாளர்களிடம் தொடர்ந்தும் வினவப்பட்டது. இன்று அவருக்கு வழங்கப்பட்ட ஆதரவின் ஊடாக சிங்கள குடியேற்றத்தை நிறுத்தியுள்ளோம்.

அரசியல் ரீதியில் இராஜதந்திர அரசியலை நாம் பின்பற்றுகின்றோமேயன்றி இப்போதும் அரசின் செயற்பாடுகளை விமர்சித்துக்கொண்டுதான் உள்ளோம்.

அரசினால் பல விடயங்கள் நிறைவேற்றப்படவேண்டி உள்ளது. அரசு அதை செய்ய தவறினால் அதற்கு மாற்று விடயங்களை கையாளக்கூடிய விடயங்கள் எம்மிடம் உள்ளது.

நாம் மக்கள் நலன் சார்ந்தே இவ்வாறு செயற்பட்டோம். இதன்மூலம் பல விடயங்களை சாதிக்கலாம் என எண்ணியே நாம் ஆதரவளித்துள்ளோம்.

கடந்த காலங்களில் நாம் தனியே ரணில் விக்ரமசிங்க அவர்களை மாத்திரம் ஆதரித்திருக்கவில்லை. மைத்திரிபால சிறிசேனவையையும் நாம் ஆதரித்திருந்தோம்.

அவருக்கான ஒத்தாசை பலவற்றையும் வழங்கியிருந்தோம். மக்களின் அபிலாசைகளிற்கான தீர்வு, காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான தீர்வு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், இராணுவத்திடம் உள்ள காணிகளை உடன் விடுவித்தல் உள்ளிட்ட விடயங்களில் நாம் தெளிவாக உள்ளோம். அதை அடைவதற்கு நாம் முழுமையாக செயற்படுவோம்.

வடக்கிற்கு அபிவிருத்தி அமைச்சராக எவரும் நியமிக்கப்பட்டதாக எதுவும் இல்லை. அவரது காலத்தில் வடக்கில் எதுவும் நடக்கவில்லை.

அவர்களால் மக்களிற்கான எதுவும் செய்யப்படவில்லை என்பதை இன்றும் சுட்டிக்காட்டுகின்றோம்.

தமது கட்சியை வளர்த்தார்களே அல்லாமல் தமிழ் மக்களின் தேவைகள், அவர்களின் அபிலாசைகளை நிவர்த்தி செய்வதில் அவர்கள் செயற்படவில்லை“ என தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net