கிளிநொச்சி கல்வி வலயத்திற்கு இலவச சீருடைகளும், காலணிகளுக்குமான வவுச்சர்கள் வந்து சேர்ந்தன
கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட மாணவர்களுகான இலவச சீருடைகளும், காலணிகளும் வந்து சேர்ந்துள்ளன.
கிளிநொச்சி கவலயக் கல்விப் பணிப்பாளர் நேரடியாக சென்று இவற்றை பெற்று வந்துள்ளார்.

15644 மாணவர்களுக்கும், 15956 மாணவிகளுக்குமாக 31600 மாணவர்களுக்கான இலவச சீருடைகளுக்கான வவுச்சர்களும், 20469 மாணவர்களுக்கான காலணிகளுக்கான வவுச்சர்களும் கிளிநொச்சி வலயத்திற்கு வந்துள்ளன.
இதில் 1200 ரூபா தொடக்கம் 1500 ரூபா வரையான பெறுமதிகளில் காலணிகளுக்கான வவுச்சர்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் நேரடியாக கொழும்புக்கு சென்று பெற்றுவந்துள்ளார்