மன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்
மன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் மீண்டும் இன்று (திங்கட்கிழமை) காலை சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.
மனித புதைகுழி அகழ்வுப் பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி கடமையின் நிமித்தம் கொழும்பு சென்றமையினால், குறித்த அகழ்வுப் பணிகள் கடந்த வியாழக்கிழமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று 117 ஆவது நாளாக அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த மனித புதைகுழியிலிருந்து இதுவரை 21 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உற்பட மொத்தம் 276 முழு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள் முழுவதையும் அப்புறப்படுத்தும் பணிகள் தற்பொழுது அதிகளவில் இடம்பெற்று வருவதாகவும், அவற்றில் 269 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அகழ்வுப் பணிகளின் போது எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் ‘காபன்’ பரிசோதனைக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் அளவில் புலோரிடாவுக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
