மஹிந்த ராஜபக்ச பதவி விலகிய போதும் வவுனியாவில் நடந்தவை!

மஹிந்த ராஜபக்ச பதவி விலகிய போதும் வவுனியாவில் நடந்தவை!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபச்ச நேற்று முன்தினம் பதவி விலகிய போதும், பதாதைகள் இன்று வரையில் அகற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பதாதைகள் வவுனியாவில் பல இடங்களில் காணப்படுகின்றன என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்ட போதிலும் அவருடைய பதாதைகள் குறித்த பகுதியில் காணப்படவில்லை.

நேற்று முன்தினம் சர்ச்சைக்குரிய பிரதமராக செயற்பட்ட மஹிந்த பதவி விலகியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று ரணில் விக்ரமசிங்க புதிய பிரமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பதவி விலகிய முன்னாள் பிரதமரின் புகைப்படம் தாங்கிய பதாதைகள் மஹிந்தவின் ஆதரவாளர்களினால் வவுனியா நகரில் மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு அருகே அமைக்கப்பட்டிருந்தது.

இன்று வரையில் இதனை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகள் எவையும் நகரசபையினால் முன்னெடுக்கப்படவில்லை.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net