திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் கடலின் சீற்றம் அதிகரிப்பு!

திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் கடலின் சீற்றம் அதிகரிப்பு!

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் கடலின் சீற்றம் நேற்று மாலை அதிகரித்து கடல் அலைகள் மேழுந்துள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் கடற்றொழில் திணைக்களம் திருகோணமலை அலுவலகத்தினால் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமெனவும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மூதூர் பகுதியில் அதிகமான கடலலையின் வேகம் காரணமாக மண் சரிவுகளும், படகுகள் உடைந்துள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net