பெரிய நீலாவணையில் கோரவிபத்து! ஒருவர் பலி! இரு குழந்தைகள் படுகாயம்!
அம்பாறை – பெரியநீலாவணையில் பிரதான வீதியில் சற்றுமுன்னர் நடைபெற்ற கோரவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இரு குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர் பெரியநீலாவணை பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற முறிவு வைத்தியர் என தெரியவந்துள்ளது.
முச்சக்கரவண்டியும் பாரவூர்தியும் விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களில் ஒருவர் உயிரிழந்து இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.









