யாழில் ஆவா குழு பெற்றோல் குண்டுத் தாக்குதல்!
யாழ்ப்பாணம் கலட்டி பகுதியில் ஆவா குழுவினரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான வீடு பலத்த சேதமடைந்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.





