மோடியை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்!

மோடியை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்!

கஜா புயல் பாதிப்புகள் குறித்து தற்போது வரை ஒரு ஆறுதல் செய்தி கூட தெரிவிக்காத பிரதமா் நரேந்திர மோடியை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டாா்கள் என முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம் கருத்து தொிவித்துள்ளார்.

தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு காரணமாக 65 போ் உயிாிழந்துள்ளனா். பல்வேறு குடியிருப்புகள் தரைமட்டமாகியுள்ளன.

புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

நடிகா்கள், பிரபலங்கள் உள்ளிட்டோரும் தங்களால் முடிந்த சேவைகளை வழங்கி வருகின்றனர்.

நாட்டின் பிரதமா் நரேந்திர மோடி தற்போது வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தொிவித்து ஒரு கருத்து தொிவிக்கவில்லை என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் இது குறித்து தனது டுவிட்டா் பக்கத்தில்,

“காஜா புயல் பேரிடர் ஏற்படுத்திய பயங்கர சேதம், உயிரிழப்பு, வாழ்வாதார முடக்கம் ஆகியவற்றிற்கு ஆறுதல் செய்தி கூட தெரிவிக்காத பிரதமரை தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள், மன்னிக்க மாட்டார்கள்” என குறிப்பிட்டுள்ளாா்.

Copyright © 1822 Mukadu · All rights reserved · designed by Speed IT net