கிளிநொச்சி முல்லைத்தீவு ஒருதொகுதி காணிகள் விடுவிப்பு

கிளிநொச்சி முல்லைத்தீவு ஒருதொகுதி காணிகள் விடுவிப்பு

கிளிநொச்சி படைகளின் கட்டுபாட்டில் இருந்த கிளிநொச்சி மாவட்டத்திற்கு சொந்தமான 39.95 ஏக்கர் காணிகளும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சொந்தமான 5.33 ஏக்கர் காணிகளுமாக மொத்தம் 45.28 ஏக்கர் காணிகள் இன்று காலை பத்து மணியளவில் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள சேவைகள் மத்திய நிலையத்தில் வைத்து கிளிநொச்சிப் படைகளின் கட்டளைத்தளபதியால் இரு மாவட்ட அரசாங்க அதிபர்களிடமும் கையளிக்கப்பட்டுள்ளது

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பகுதிக்கு உட்ப்பட்ட பகுதியில் ஒரு அரச காணி மற்றும் பத்து தனியார் காணிகளும் கண்டாவளை பிரதேச செயலர் பகுதிக்கு உட்ப்பட்ட பகுதியில் இரண்டு தனியார் காணிகளும் அடங்கலாக 39.95 ஏக்கர் காணிகளும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பகுதிக்கு உட்ப்பட்ட பகுதியில் இரண்டு தனியார் காணிகளும் துணுக்காய் பிரதேச செயலர் பகுதிக்கு உட்ப்பட்ட பகுதியில் ஓர் தனியார் காணியும் அடங்கலாக 5.33 ஏக்கர் காணிகளுமே இன்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளது

இதன் போது கருத்து தெரிவித்த இரண்டு மாவட்ட அரசாங்க அதிபர்களும் குறித்த காணிகள் எவை என அடையாளப்படுத்தப்பட்ட ஆவணகள் கிடைத்துள்ளது ஜனாதிபதியின் பணிப்புக்கமையவே இக் காணிகள் விடுவிக்கப்படுள்ளது

விடுவிக்கப்பட்ட காணிகள் யாருடையது என ஆராய்ந்து அவர்களை மாவட்ட செயலத்திற்கு அழைத்து வடமாகாண ஆளுநர் தலைமையில் அவர்களிடம் கையளிக்க உள்ளதாக தெரிவித்தனர்

அத்துடன் படையினர் வசமுள்ள மீதிக் காணிகளையும் விடுவிப்பதற்கான கோரிக்கை ஒன்றையும் கிளிநொச்சிப் படைகளின் கட்டளைத்தளபதியிடம் முன்வைத்ததாகவும் அவர் இது தொடர்பில் ஆராய்ந்து விரைவில் முடிவுகளை எட்டுவதாக உறுதியளித்துள்ளார் எனவும் கூறினார்

Copyright © 5048 Mukadu · All rights reserved · designed by Speed IT net