சர்ச்சைகளை அடுத்து இராஜாங்க அமைச்சரானார் விஜயகலா!
சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டு தென்னிலங்கையை அதிர செய்த விஜயகலா மகேஸ்வரன் மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.
சமகால அரசாங்கத்தின் அமைச்சரவை நேற்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டது.
இந்நிலையில் பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இதன்போது கல்வி ராஜாங்க அமைச்சராக விஜயகலா மகேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் விடுதலைப் புலிகளின் மீள் வருகையின் அவசியம் குறித்து விஜயகலா கருத்து வெளியிட்டிருந்தார்.
அவரின் கருத்து தென்னிலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தனது இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகிக் கொண்டார்.
கடந்த அரசாங்கத்தின் போது மகளிர், சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சராக விஜயகலா மகேஸ்வரன் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
