மக்களுக்கான உதவிகளை பகிர்ந்தளிக்குமாறு கோரிக்கை!

மக்களுக்கான உதவிகளை பகிர்ந்தளிக்குமாறு கோரிக்கை மாவட்டச் செயலகம் கோரிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள மக்களுக்கு அரசியல் கட்சிகள் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல தரப்பினர்களும் பல்வேறு வகையான உதவிகளை வழங்கி வருகின்றார்கள்.

ஆனால் குறித்த உதவிகள் பெருமளவுக்கு நகருக்கு அன்மையாக அமைந்துள்ள நலன்புரி நிலையங்களுக்கே அதிகம் சென்றடைகிறது எனவும், மாவட்டத்தின் கிராமங்களில் உள்ள பல வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து மக்கள் தங்கியுள்ள இடங்களுக்கு போதுமான உதவிகள் கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ள அதிகாரிகள், உதவிகளை வழங்குகின்ற தரப்புக்கள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக தொடர்பு கொண்டு தகவல்களை பெற்று அதற்கமைவாக உதவிகளை வழங்குமாறும் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தினால் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

உதவிகள் மேற்கொள்கின்றவர்கள் அனைவரும் ஒரே வகையான உதவிகள் வழங்குவதனை தவிர்க்கும் வகையிலும் மக்களின் தேவைகளை கருத்தில் எடுத்து எல்லா மக்களுக்கும் உதவிகள் சென்றடைவதனை நோக்காக கொண்டும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் ஊடாக தொடர்புகளை கொண்டு உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net