சி.வி.கே செய்த மனிதநேய செயல்!

சி.வி.கே செய்த மனிதநேய செயல்!

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக தனது ஒரு மாத சம்பளத்தை வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் வழங்கியுள்ளார்.

குறித்த நிவாரண தொகையை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் இன்று வழங்கியுள்ளார்.

அதன்படி வெள்ள நிவாரணமாக தனது ஒரு மாத கொடுப்பனவான ஐம்பதாயிரம் ரூபாயினை அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கியுள்ளார்

இதேவேளை இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொருளாளர் திரு. கனகசபாபதியும் ஐம்பாதாயிரம் ரூபாயை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கியுள்ளார்.

வடக்கில் பெய்துவரும் அடைமழை மற்றும் வெள்ளம் காரணமாக கிளிநொச்சி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 11688 குடும்பங்களை சேர்ந்த 38534 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இவர்களில் 2064 குடும்பங்களைச் சேர்ந்த 6882 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net