அரசியல் கைதிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை!
அரசியல் கைதிகளின் விடுதலைக் குறித்து ஆராய்ந்து, விடுவிக்க கூடியவர்களை விரைவில் விடுவிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக, தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத விவகார அமைச்சர், எம்.எச்.ஏ.ஹலீம் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைய, அவர்களை விரைவில் விடுதலைச் செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) முற்பகல் கண்டிக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்ட அவர், ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் தெரிவித்த அவர்,

”கூட்டமைப்பிற்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் எதுவிது ஒப்பந்தமும் செய்து கொள்ளப்படவில்லை. இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. எங்களுக்குள் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
அவர்களுக்கு இருக்கும் பிர்சினைகளைக் கூறினார்கள். நாம் அதற்கு இணங்கினோம். இது தொடர்பில் எங்கள் தலைவரும் தெளிவான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
அவர்கள் காணிப்பிரச்சினை, அரசியல் கைதிகளின் பிரச்சினை, குறித்து கூறினார்கள். இதற்காக அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க முடியாது.
கலந்துரையாடி விடுவிக்கக் கூடியவர்களை விடுவிக்க நாம் எதிர்ப்பார்த்துள்ளோம்.“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.