கிளிநொச்சி, முல்லைத்தீவு வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட கூட்டம்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட கூட்டம் இன்று  10.45 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக மண்டபத்தில் ஆரம்பமாகியது.

பொது முகாமைத்துவம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தலமையில் இடம்பெறுகிறது.

குறித்த கலந்துரையாடலில் பா.ம உறுப்பினர்களான, சேனாதிராஜா, சுமந்திரன், சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ் காந்தராஜா, சிவமோகன் மற்றும் கிளிநொச்சி முல்லைத்தீவு அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது பாதிப்புக்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு வருகின்றது.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிட உள்ளமை குறிப்பிட தக்கதாகும்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net