ஜனவரியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தால் மாபெரும் பேரணி

ஜனவரியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தால் மாபெரும் பேரணி

எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி மாபெரும் கூட்டமும், பேரணியும் நடாத்தவுள்னதாக இன்று வவுனியாவிலுள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது வலிந்து காணமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி உ.சரஸ்வதி தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனவரி மாதம் 9ம் திகதி மாபெரும் கூட்டமும், பேரணியும் நடாத்தவுள்ளோம். இப்பேரணினை நடத்த அரச சார்பற்ற அமைப்புக்கள், சகல அரசியல்வாதிகள், சிவில் அமைப்புக்கள், மக்கள், ஊடகங்கள், பல்கலைக்கழக மாணவர்கள், என எல்லோரும் எம்முடன் இணைந்து நீண்ட காலமாக காணாமல் போன எம் உறவுகளை தொலைத்து விட்டு தேடும் முயற்சிக்கு எல்லோரும் முன் வந்துள்ளோம். எனவே எமது இச்செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என தெரிவித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எட்டு மாவட்டத்தின் இணைப்பாளர்.

இன்று வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்களையும், அவர்களுக்கு பக்க பலமாக இணைந்து வலுச்சேர்க்கின்ற உறவுகளையும் சந்தித்திருந்தோம்.

எமது இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இரண்டு வருடத்தை நெருங்கவுள்ள நிலையில், வருகின்ற மார்ச் மாதம் ஜெனிவாவிலே மனித உரிமைக்கான 40வது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. எங்களது கோரிக்கைகளை அம்மன்றத்திலே எமது தேடலும், எமது உறவுகளின் விடுதலைக்காகவும் குரல் கொடுத்திருந்தோம்.

மேலும் இலங்கையிலே பல தரப்பட்ட அமைப்புக்களை சந்த்துள்ளதுடன், இலங்கை ஜனாதிபதியையும் சந்தித்து மகஜரினை கையளித்திருந்தோம். அப்போது எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் இன்று வரை அதனை நிறைவேற்றவில்லை.

எங்களுக்கான தீர்வினை பல முறைகளில் முன்வைக்கப்பட்ட போதும் இதுவரை ஐ.நா மனித உரிமை ஆணையகத்தால் நிறைவேற்றப்படாத நிலையில், மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தொடரிலாவது எங்களது கேரிக்கைகளை ஏற்றுக்கொண்டு இலங்கை அரசிற்கு ஒரு அழுத்தத்தை கொடுப்பதன் மூலமாக எங்களது உறவுகளின் விடுதலையையும் எங்களுக்கான தீர்வையும் பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net