நாட்டில் இடம்பெற்ற குழப்பங்கள் நீங்கி இயேசுவின் பிறப்பை கொண்டாட அழைத்த இயேசுவிற்கு நன்றி

நாட்டில் இடம்பெற்ற குழப்பங்கள் நீங்கி இயேசுவின் பிறப்பை கொண்டாட அழைத்த இயேசுவிற்கு நன்றி செலுத்துவோம் பி.என்.இராஜசிங்கம்.

நம் நாட்டில் நிலவிய அரசியல் குழப்பங்கள் நீங்கப்பெற்று தற்போது சுமூகமான கிறிஸ்து பிறப்பைக் கொண்டாட அருள் புரிந்த இயேசுவிற்கு நன்றி செலுத்துகின்றோம்.

நம் நாட்டில் சமாதானமும் நீதியும் ஆசீரும் சுகவாழ்வு நீடிக்கவும் பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன்.

இவ்வாறு வவுனியா இறம்பைக்குளம் ஈஷி மிஷன் ஆலயத்தின் பிரதான பிஷப் அனுப்பிவைத்த இயேசு கிறஸ்து பிறப்புச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அச் செய்தியில் தெரிவிக்கையில்,

ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக இந்த நன்நாளில் உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துவின் பிறப்பை முன்னிட்டு கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை இச் செய்தி மூலம் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

நம் நாட்டில் நிலவிய அரசியல் குழப்பங்கள் நீங்கப்பெற்று தற்போது சுமூகமான கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாட அருள் செய்த இயேசுவிற்கு நன்றி செலுத்துகின்றோம்.

நம் நாட்டில் சமாதானமும் நீதியும் ஆசீரும், சுகவாழ்வும் நீடிக்க பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன். என்று மேலும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net