பாரிய வெள்ளத்தில் பலரையும் நெகிழ வைத்த சம்பவம்!

பாரிய வெள்ளத்தில் பலரையும் நெகிழ வைத்த சம்பவம்!

வட மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பெருந்தொகை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீட்பு பணியில் ஈடுபட்ட போது, பிறந்து சில நாட்களேயான குழந்தையும், தாயும் கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

பெய்த அடைமழை காரணமாக ஏற்பட்ட பாரிய வெள்ளத்தில் வயல் காவலுக்குச் சென்றவர்களும் உதவிப் பணிகளுக்குச் சென்றவர்களும் வீடுகளில் இருந்தவர்களும் சிக்கியிருந்தனர்.

வீடுகளுக்குள் இருந்தவர்கள் மீட்கப்பட்ட நிலையில், மரங்களில் ஏறித் தப்பியிருந்த பலரையும் கடற்படையினர் படகுகள் மூலம் மீட்டனர்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net