வரவு செலவு திட்டத்தை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்க வேண்டும்.

வரவு செலவு திட்டத்தை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக என்னைத் தவிர தெரிவு செய்யப்பட்டுள்ள 14 தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு தடவைகள் ஜக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இந்த அரசாங்கத்திற்கு கால நீடிப்பைப் பெற்றுக்கொடுத்துள்ளார்கள்.

இதற்கு அப்பால் இலங்கை அரசாங்கமும் ஜ.நா மனித உரிமைப் பேரவையும் இணக்கம் தெரிவித்துள்ள விடங்களைக்கூட அதனை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த மூன்றரை வருட காலம் எதிர்கட்சித் தலைவர் அவருடன் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்தையும் ஜ.நா. மனித உரிமைப் பேரவைக்கும் எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கவில்லை அதற்கு மாறாக இன்னும் மூன்றாவது வரவு செலவுத்திட்டத்தில் கூட இந்த இலங்கை அரசாங்கத்திற்கான வரவு செலவுத்திட்டத்தில் ஆதரவை வழங்கியிருக்கின்றார்கள்.

நான்காவது வரவு செலவுத்திட்டம் தைமாதம் வரவிருக்கின்றது ஆகவே இந்த நான்காவது வரவு செலவுத்திட்டத்தில் கூட பாதுகாப்பிற்கு வழமைபோன்று பெருந்தொகையான நிதியை ஒதுக்கத்தான் போகின்றார்கள்.

ஆகவே குறைந்த பட்சம் மூன்று வரவு செலவுத்திட்டதில் நீங்கள் தவறிழைத்திருக்கின்றீர்கள். எந்த நிபந்தனையும் இல்லாமல் பெருந்தொகையான நிதி பாதுகாப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதற்கு ஆதரவளித்தள்ளீர்கள்.

நான்காவது வரவு செலவுத்திட்டத்திலாவது குறைந்த பட்சம் இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா? இல்லையா? என்பதையும் கிட்டத்தட்ட 26வருட காலமாக சிறையிலிருக்கின்றார்கள்.

அரசியல் கைதிகளில் விடுதலை உட்பட வலியுறுத்தி இதற்கு அரசாங்கம் சரியாக பதில் தரவில்லையாக இருந்தால் ஜனவரி மாதம் வரவிருக்கின்ற பாதுகாப்பின் அமைச்சினுடைய வாக்கெடுப்பின் போதாவது தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு அதற்கு ஆதரவு வழங்கக்கூடாது என்பது தான் என்னுடைய நிலைப்பாடு.

ஆகவே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தன்னிச்சையாக கைவிடப்பட்டு தங்களுடைய பிரச்சினைக்கு தாங்களாகவே போராடுகின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

தமிழ் மக்களுடைய பிரதிநிதிகளாக இருக்கின்றவர்கள் தொடர்ச்சியாக இந்த அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதன் ஊடாக இன்றைக்கு எதிர்கட்சி தலைவரே தன்னுடைய பதவியை தக்கவைத்துக்கொள்வதற்கு தனியாக நின்று போராடுகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

இலங்கை அரசாங்கமும் ஜ.நா மனித உரிமைப் பேரவையும் இணக்கம் தெரிவித்துள்ள விடயங்களை நடைமுறைப்படுத்தவதற்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கும் ஜ.நா மனித உரிமைப் பேரவைக்கும் கடுமையான அழுதத்தைக் கொடுப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

என்பதை இன்றைய தினத்தில் நாங்கள் வலியுறுத்தியுறுத்துவதாக இவ்வாறாக இன்று வவுனியாவில் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net