வவுனியாவில் விஷேட தேவைக்குட்பட்ட குடும்பப்பெண்ணிற்கு உதவி வழங்கிவைப்பு
வவுனியாவில் விஷேட தேவைக்குட்பட்ட குடும்பப் பெண்ணின் வர்த்தக நிலையத்திற்கு இன்று முற்பகல் தமிழ் விருட்சம் அமைப்பினூடாக உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா இலுப்பையடிப்பகுதியிலுள்ள தினச்சந்தைக்கு முன்பாக காத்தார்சின்னக்குளம் பகுதியில் வசித்து வரும் எஸ்.சாரதா விஷேட தேவைக்குட்பட்ட வலுவிழந்த குடும்பப்பெண்ணிற்கு வவுனியா பிரதேச செலயகத்தினால் வியாபார நிலையம் அமைத்து கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கிறிஸ்மஸ் புதுவருடத்தை முன்னிட்டு அவ்விபாபார நிலையத்திற்கு விற்பனை செய்வதற்காக வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமாரினால் ஒரு தொகை இன்று உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.




