கிளிநொச்சி மாவட்டத்தில் நத்தார் கொண்டாட்டங்கள் அமைதியாக இடம்பெற்றன.
மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக மக்கள் முகாம்களிலும், உறவினர் இல்லங்களிலும் தங்கியுள்ள நிலையில் இவ்வருட நத்தார் கொண்டாட்டங்கள் அமைதியாக கொண்டாடப்பட்டன.
தேவாலயங்களில் விசேட வழிபாடுகள், திருப்பலிகள் இடம்பெற்றன. குறித்த வழிபாட்டில் மக்கள் கலந்துகொண்டு நத்தார் தினத்தை அமைதியாக கொண்டாடினர்.
கிளிநாச்சி குழந்தை இயேசு ஆலயத்தில் நள்ளிரவு ஆராதனை இடம்பெற்றது.
அருட்தந்த இயேசுதாசன் குறித்த வழிபாட்டில் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். இயேசு பாலகனாக அவதரித்தமையின் அடையாளமாக பாலகன் இயேசுவின் சுருவம் விசேடமாக அமைக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து திருப்பலி ஒப்பு கொக்கப்பட்டது.
கிளிநாச்சியில் உள்ள அங்கிலிக்கன் திருச்சபையிலும் நத்தார் நள்ளிரவு ஆராதனைகள் இடம்பெற்றன. வண பிதா டானியேல் அவர்களால் திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டு விசேட வழிபாடு இடம்பெற்றது.
முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் இன்று காலை விசேட நத்தார் வழிபாடு அமைதியாக திருப்பலி ஒப்பு கொடுத்தலுடன் இடம்பெற்றது.
வண பிதா அசோகன் அவர்களால் திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டது. தேவாலயங்களில் இடம்பெற்ற வழிபாடுகளில் மக்கள் அமைதியான முறையில் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கதாகும்.




