மின்கசிவு காரணமாக உயிரிழந்த குடும்பத்தின் ஒருவருக்கு வேலைவாய்ப்பினைப்பெற்றுக்கொடுக்க நடவடிக்கை.

கிளிநொச்சியில்  மின்கசிவு காரணமாக உயிரிழந்த குடும்பத்தின் ஒருவருக்கு வேலைவாய்ப்பினைப்பெற்றுக்கொடுக்க நடவடிக்கை.

அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட மின்கசிவு காரணமாக உயிரிழந்த குடும்பத்தின் ஒருவருக்கு வேலைவாய்ப்பினைப்பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக விவசாயப்பிரதிஅமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் தெரிவித்துளளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் பாதிககப்பட்ட மக்களையும் இன்று (25-12-2018) சென்று பார்வையிட்ட அங்கஜன் அவர்கள், கிளிநொச்சி கண்டாவளை பெரியகுளம் பகுதியில் இவ்வெள்ள அனர்தத்தின் போது ஏற்பட்ட மின்ஒழுக்கினால் உயிரிழந்த குடும்பஸ்தரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய அவர், ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கும்போது, குறித்த குடும்பஸ்தரின் இழப்பால் இக்குடும்பத்தின் நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இக்குடும்பத்தின் வருமானத்திற்காக ஒருவருக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கு தான் முழுமுயற்சிகளை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி மின் ஒழுக்கினால் பெரியகுளம் கண்டாவளையைச்சேர்ந்த 56 வயதுடைய நல்லதம்பி திருச்செல்வம் இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net