ஒற்றையாட்சி தொடர்பில் விக்கியின் வழமையான வியாக்கியானம்!

ஒற்றையாட்சி தொடர்பில் விக்கியின் வழமையான வியாக்கியானம்!

ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சியா ? நான் இதனை 100 தடவைக்கு மேல் விளங்கப்படுத்திவிட்டேன். ஆனாலும் தமிழ் ஊடகங்கள் ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சி என்றே எழுதுகின்றன என தமிழரசுகட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது இல்லத்தில் தற்போது நடாத்திக்கொண்டிருக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள தனது இல்லத்தில் சுமந்திரன் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.

அதன்போதே ஏக்கிய இராட்சி என்றால் ஒற்றையாட்சி இல்லை என வழமையான தனது வியாக்கியானத்தை முன்வைத்துள்ளார்.

இதன்போது குறிப்பிட்ட அவர்,

மகாநாயக்கர்களைச் சந்தித்த ரணில் ஒற்றையாட்சி தீர்வை வழங்குவதாக வாக்குறுதியளித்ததாக தமிழ் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. ரணில் விக்கிரமசிங்கவும் மகாநாயக்கர்களும் தமிழிலா உரையாடினார்கள்.

அவர்கள் சிங்களத்தில் தான் உரையாடினர். அன்போது ஏக்கிய இராட்சிய என்றே கூறியிருப்பார். ஒற்றையாட்சி என்று கூறியிருக்கமாட்டார்கள்.

ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சி இல்லை. இதனை நான் 100 தடவைகளுக்கு மேல் விளங்கப்படுத்திவிட்டேன். ஆனால் தமிழ் ஊடகங்கள் ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சி என்றே எழுதுகின்றன.

மகாநாயக்கர்களுடனான சந்திப்பின்போது பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார் என எழுதியுள்ளார்கள்.

ஆம் நாம் உத்தேச அரசியல் யாப்பின்போதே அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். பௌத்தத்திற்கு முன்னுரிமை கொடுப்பதில் எமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் அனைத்து மதங்களும் மதிக்கப்பட்டு அவை சம அந்தஸ்தில் நோக்கப்படவேண்டும் என்றார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net