மகாராணியிடமுள்ள தங்கத்திலான பியானோ பற்றித்தெரியுமா?

மகாராணியிடமுள்ள தங்கத்திலான பியானோ பற்றித்தெரியுமா?

பிரித்தானிய மகாராணியிடமுள்ள தங்கத்திலான பியானோ இசைக்கருவி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மகாராணியிடமுள்ள தங்க பியானோ கடந்த 1856ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதி முன்னாள் மகாராணி விக்டோரியாவுக்கு கொடுக்கப்பட்டது.

விக்டோரியாவுக்கும், ஆல்பர்டுக்கும் இசை மீது அதிக ஆர்வம் இருந்த நிலையிலேயே அது கொடுக்கப்பட்டது. அந்த பியானோவை வைத்து இருவரும் காதல் பாடல்களை வாசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்த வகையான பியானோக்கள் அந்த காலக்கட்டத்தில் £138,000 இற்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் மகாராணியிடமுள்ள பியானோ கைகளால் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்ததாகும்.

இதேவேளை, அண்மையில் பிரித்தானிய மகாராணி எலிசபெத் ஆற்றிய கிறிஸ்துமஸ் உரையின் போது அவர் இருந்த அறையில் தங்க பியானோவும் வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net