//anjeng இன்றைய வானிலை! | Mukadu

இன்றைய வானிலை!

இன்றைய வானிலை!

வடக்கு, வட மத்திய, மத்திய, வட-மேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மிகவும் குளிரான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

“நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை தொடர்ந்து இருக்கும். எனினும், பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்கு மற்றும் உவா மாகாணங்களிலும், அம்பாறை, புத்தளம், கேகாலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது

எவ்வாறாயினும், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது” என அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net