வவுனியாவில் கழிவுகளை கணக்கிலெடுக்காத நகரசபையினர்!
வவுனியா வைரவபுளியங்குளம் யங்ஸ்டார் மைதானத்திற்கு அருகே காணப்பட்ட குப்பைகளுக்கு நடுவில் நகரசபையினரே எங்களையும் ஏற்றிச் செல்லுங்கள் என எழுதப்பட்ட பாதாதையொன்று இன்று (01.01) பிற்பகல் வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபையின் கழிவகற்றல் செயற்பாடுகள் தொடர்பில் அண்மைக்காலமாக பலராலும் விமர்சிக்கப்பட்டு வந்துள்ளன.
குறிப்பாக நகரில் கூட கழிவுகளை சீராக அகற்றவில்லை குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இந்த பதாதை வைக்கப்பட்டுள்ளது.
வைரவபுளியங்குளம் வீதி , கதிரேசன் வீதி , வைரவர் கோவில் அருகே போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக நகரசபையினரால் குப்பைகள் அகற்றப்படாமையினால் குப்பைகள் வீதி முழுவதும் சிதறிக்கிடப்பதினை காணக்கூடியதாகவுள்ளது.