வவுனியா பொலிசார் புதுவருட சத்திய பிரமாணத்தையடுத்து புதிய ஆண்டுக்கான தமது கடமைகளை ஆரம்பித்தனர்.
குறித்த நிகழ்வு வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலய வளாகத்தில் இன்று காலை 9 மணிக்கு இடம்பெற்றது.
2019 ஆம் ஆண்டுக்கான முதலாவது வேலை நாள் இன்றாகும். இன்றைய தினம் சகல அரச திணைக்களங்கள் மற்றும் அரச, அரசார்பற்ற அலுவலங்களில் புதுவருட உறுதியுரையுடன் வேலைகள் ஆரம்பித்தன.
அந்தவகையில் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திலும் இந்த வருடத்திற்கான அரசாங்கத்தின் சத்திய பிரமாணத்துடன் வேலைகள் ஆரம்பமாகின.
முன்னதாக தேசியக் கொடி ஏற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து பொலிஸ் கொடி ஏற்றப்பட்டு தொடர்ந்து பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றதுடன் தமது புதுவருட வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.அனுர அபயவிக்கிரம, பொலிஸ் அத்தியட்சகர் ரி.எம்.எஸ்.எம்.தென்னக்கோன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.பி.மல்வலகே, பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலய பிரதான கணக்காளர் எஸ்.ரவிச்சந்திரன், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஹிந்த வில்வ ஆராய்ச்சி, பொலிஸ் அதிகாரிகள், பொலிசார், பொலிஸ் திணைக்களத்தில் கடமையாற்றும் சிவில் உத்தியோகத்தர்கள் எனப்பலரும் இதில் கலந்து கொண்டனர்.