கண்டாவளை மகாவித்தியாலயத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்.
கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்கள் கண்டாவளை மகாவித்தியாலயத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளார்.
இன்று (03-01-2019) கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சர் அவர்கள், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கண்டாவளைப்பிரதேசத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்று பார்வையிட்டதுடன்,கண்டாவளை மகாவித்தியாலயத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.
இன்று காலை 9.30 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மற்றும் கண்டாவளைப்பிரதேச செயலாளர் உதவிப்பிரதேச செயலாளர், உத்தியோகத்தர்கள், மாணவர்கள் அதிபர் ஆசிரியர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.