கிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தினரால் கிணறுகள் சுத்தம் செய்யும் பணிகள்.

கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தினரால் கிணறுகள் சுத்தம் செய்யும் பணிகள்.

வெள்ள நீர் உட்சென்ற பொது மக்களின் கிணறுகளை சுத்தம் செய்யும் பணிகளை கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கம் முன்னெடுத்து வருகிறது.

அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் அனர்த்தம் காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பொது மக்களின் கிணறுகள் முழுமையாக வெள்ளத்தினால் மூடப்பட்டு வெள்ள நீர் உட்சென்றதன் காரணமாக மக்களின் நீர்த்தேவைக்கு பாவிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கமானது புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் இயந்திர சாதனங்களை கொள்வனவு செய்து பொது மக்களின் கிணறுகளை சுத்தம் செய்யும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சங்கத்தின் தலைவர் பசுபதி உமாகாந்தன் தலைமையில் தற்போது பணிகள் தருமபுரம்புதுக்காடுப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இப்பணி தொடர்ந்து பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மாற்று வலுவுள்ளோர் சங்கம் அறிவித்துள்ளது

இதேவேளை வெள்ள பாதிப்புக்களுக்கு உள்ளான மக்களுக்கும் மாணவர்களுக்கும் இச் சங்கமானது புலம் பெயர் உறவுகளின் உதவியுடன் தொடர்ந்தும் உதவிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Copyright © 5851 Mukadu · All rights reserved · designed by Speed IT net