வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களிற்கு பல்கலைக்கழக மாணவர்களால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000 பாடசாலை மாணவர்களிற்கு இவ்வாறு யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் உதவி வழங்கி வைக்கப்பட்டது.
லண்டனில் உள்ள யாழ்பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் உதவியுடன் குறித்த உதவிகள் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மாணவர் ஒன்றியத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த உதவிகள் 75 முன்பள்ளி மாணவர்கள் மற்றும், தரம் ஒன்று முதல் உயர்தரம் வரை கல்வி கற்கும் மாணவர்களிற்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கதாகும்.
முறிகண்டி தென்னிந்திய திருச்சபை வளாகத்தில் 100 மாணவர்களிற்கு இவ்வாறு இன்று வியாளக்கிழமை வழங்கி வைக்கப்பட்டதுடன், ஏனைய தெரிவு செய்யப்பட்ட கிராமங்களிலும் இவ்வாறு பல்கலைக்கழக மாணவர்களால் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.










