தமிழர் தலைநகரில் மான்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!
தமிழர் தலைநகரான திருகோணமலையில் கோணேஸ்வரர் ஆலயத்தை அண்மித்த பகுதிகளில் பாதீனிய செடிகளை அகற்றும் பணியில் நகரசபை ஊழியர்கள் இன்று ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பகுதிகளில் மான்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் நிலையில் அவை பாதீனிய செடிகளை உண்டு இறந்து வருவதாக திருகோணமலை நகரசபை தலைவருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து குறித்த செடிகளை அகற்றும் பணியில் நகரசபையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை திருகோணமலை பகுதிகளில் வாழும் மான்களை பாதுகாக்கும் நோக்கில் அவைகளுக்கான பாதுகாப்பான இடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மான்களை பாதுகாக்க முடியும் எனவும் நகரசபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்



