திருகோணமலை – மூதூரில் மாடுகள் அறுக்கத் தடை.

திருகோணமலை – மூதூரில் மாடுகள் அறுக்கத் தடை.

திருகோணமலை – மூதூர் பிரதேசத்தில் அண்மைக் காலமாக மாடுகள் இறப்பதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டைக் கருத்திற் கொண்டு மாடுகள் அறுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கால்நடை வைத்தியரின் ஆலோசனைக்கு அமைவாகவும், மூதூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் வேண்டுகோளுக்கிணங்கவும் மாடுகளின் இரத்த பரிசோதனை மாதிரி அறிக்கை கிடைக்கும் வரை இன்று முதல் மறு அறிவித்தல் வரும் வரை இறைச்சிக்காக மாடுகள் அறுப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அறூஸ் அறிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தின் அண்மைக் காலமாக மூதூர் மற்றும் தோப்பூர் பகுதிகளில் அதிகளவான மாடுகள் இறந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net