யாழில் புத்தாண்டு தினத்தில் பிறந்த 21 குழந்தைகள்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புத்தாண்டு தினத்தில் 21 குழந்தைகள் பிறந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
வைத்தியசாலையில் மகப்பேற்று விடுதியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாய்மார்கள் இவ்வாறு 21 குழந்தைகளை பிரசவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரசவத்தின் போது 12 ஆண்குழந்தைகளும், 9 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, புத்தாண்டில் இக்குழந்தைகள் பிறந்ததை அடுத்து தாய்மார்கள் இனிப்பு கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.