வெள்ள அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட மொத்த இழப்பீடுகள்!

வெள்ள அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட மொத்த இழப்பீடுகள்!

முல்லைத்தீவில் கடந்த மாதம் வெள்ள அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட மொத்த இழப்பீடுகள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் உத்தியோகபூர்வமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த அறிக்கை தொடர்பாகவும் அவர் நேற்று கருத்து தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பல்வேறு பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரங்கள் உட்கட்டுமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

நெற்பயிர் செய்கை 20146.5 ஏக்கர் பகுதியாகவும், முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

நிலக்கடலை 3849 ஏக்கர் சேதமடைந்துள்ளன. உளுந்து, பயறு போன்றனவும் முழுமையாக சேதடைந்துள்ளன. மரக்கறி பயிர்செய்கை 498 ஏக்கர் சேதமடைந்துள்ளன.

கால்நடைகளில் மாடுகள் 3430, ஆடுகள் 912, கோழிகள் 6895 முழுமையாக இறந்துள்ளன.

மீன்பிடித்துறையில் கடற்தொழிலில் ஈடுபடுகின்ற 15 படகுகளுடன், 187 வலைகள் காணாமல் போயுள்ளன.

நன்நீர் மீன்பிடியில் ஈடுபடுகின்றவர்களின் 07 படகுகளுடன் 37 வலைகளும் காணாமல் போயுள்ளன.

86 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. அதில் 2297 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.

மேலும் முல்லைத்தீவில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் 1118 குடும்பங்களில் 32551 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்தக்கது என்று மேலும் தெரிவித்திருந்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net