யாழில் ஆறு பாடசாலைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

யாழில் ஆறு பாடசாலைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

யாழிலுள்ள 6 பாடசாலைகள், நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்தமையால் அவைகளுக்கு எதிராக சுகாதார பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

யாழ்.பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலுள்ள பகுதிகளில், விசேட டெங்கு ஒழிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் குறித்த ஆறு பாடசாலைகளும், நுளம்புகள் பரவும் இடங்களை பேணி வந்தாக கூறியே சுகாதார பிரிவினர், யாழ்.நீதிமன்றில் வழக்குத் தாக்கலொன்றை நேற்று (வெள்ளிக்கிழமை) செய்துள்ளனர்.

இதேவேளை, வேளை நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட யாழ்.பல்கலைகழகம் மற்றும் பல்கலைகழக மாணவர்கள் விடுதி வளாகங்களிலும் நுளம்பு குடம்பிகள் அதிகளவில் காணப்படுவதாக, சுகாதார திணைக்களத்தில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © 1849 Mukadu · All rights reserved · designed by Speed IT net