இந்திய வங்கிகள் வேலைநிறுத்தம்

இந்திய வங்கிகள் வேலைநிறுத்தம்

தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைள் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இந்திய வங்கிகள் அறிவித்துள்ளன.

குறித்த போராட்டத்தை எதிர்வரும் 8 ஆம், 9 ஆம் திகதிகளில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் இந்திய வங்கிகள் தெரிவித்துள்ளன.

மத்திய அரசுக்கு எதிராக, மத்திய வங்கி ஊழியர் சங்கங்களான ஐ.என்.டி.யூ.சி, ஏ.ஐ.டி.யூ.சி, எச்.எம்.எஸ், சி.ஐ.டி.யூ உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

மேலும் இவ்வேலை நிறுத்த போராட்டத்துக்கு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகியன ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net