நடுவீதியில் பற்றியெரிந்த வாகனங்கள் – 5 சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேர் பலி!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இரண்டு லொறிகள் வான் மீது மோதியதனால் ஏற்பட்ட விபத்தில் ஐந்து சிறுவர்கள் உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
சிறுவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்றின் மீது இரண்டு லொறிகள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக சிறுவர்களை ஏற்றிச் சென்ற வான் நடுவீதியில் தீப்பற்றி எரிந்துள்ளது.
இவ்விபத்தில் வானில் பயணித்த ஐந்து சிறுவர்கள் உள்ளிட்ட ஏழு பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இதன்போது காயமடைந்த 8 பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் இரண்டு லொறிகளின் சாரதிகளும் உயிரிழந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.