வவுனியாவில் மரத்தில் தீ பற்றியமையால் பதற்றம்!

வவுனியாவில் மரத்தில் தீ பற்றியமையால் பதற்றம்!

வவுனியா சிவபுரம் பகுதியில் மரம் தீப்பிடித்து எரிந்தமையால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது.

சிவபுரம் பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றிலுள்ள ஆலமரத்திற்கு அக்காணியில் வசிப்போர் வழமைபோல நேற்றைய தினமும் விளக்கேற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த விளக்கின் மூலம் மரத்தில் தீ பற்றியுள்ளது. இதனால் மரத்தின் ஒருபகுதி முற்றாக எரிந்து முறிந்து விழுந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பூவரசங்குளம் பொலிஸார், சம்பவம் தொடர்பில் வவுனியா நகரசபையின் தீயணைப்பு பிரிவிற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net