கிளாலி கிராமத்து மக்களில் பிரச்சினையை நேரில்பார்வையிட்ட சிறீதரன்!

கிளாலி கிராமத்து மக்களில் பிரச்சினையை நேரில் சென்று பார்வையிட்ட சிறீதரன்!

கிளாலி பொது அமைப்புக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கிளாலி கிராமத்திற்கு விஜயம் செய்து மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக ஆய்வு செய்துள்ளார்.

பயன்பாடற்ற காணிகளை விவசாயத் தேவைகளுக்காக மக்களுக்கு பகிர்ந்தளித்து விவசாய உற்பத்திகளை ஊக்குவிப்பதுடன் மக்களின் சுயசார்பு பொருளாதாரத்தை எவ்வாறு கட்டமைப்பது என்பது தொடர்பாகவும் ஆராய்ந்தார்.

அத்துடன் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், வெள்ளப் பாதிப்புக்களையும் பார்வையிட்டதுடன், அண்மைக்காலமாக கிளாலிப் பகுதியில் தன்னால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல அபிவிருத்தி திட்டங்களையும் பார்வையிட்டார்.

இதேவேளை, இந்தக் களப்பயணத்தில் நாடாளுமன்ற உறுப்பினருடன் கட்சியின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப தவிசாளர் கஜன், உறுப்பினர்களான த.ரமேஸ், வே.கோகுலராஐ், கி.வீரவாகு தேவர் ஆகியோருடன் கடற்றொழிலாளர் சங்க சமாசத் தலைவரும் கட்சியின் கிளாலி வட்டார அமைப்பாளருமான செல்லா மற்றும் முகாமையாளர் அன்ரன் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net