மடுவில் பணம் வசூலித்த சிங்கள இளைஞர்கள் பொலிஸில் ஒப்படைப்பு!

மடுவில் பணம் வசூலித்த சிங்கள இளைஞர்கள் பொலிஸில் ஒப்படைப்பு!

மடுவில் தமிழ் மக்களின் வீடுகளுக்குச் சென்று பலவந்தமாக பணம் வசூலித்த சிங்கள இளைஞர்களை மடக்கி பிடித்த மக்கள் அவர்களைப் பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

தமிழ் மக்களின் வீடுகளிற்கு சென்று பணம் வசூலித்த அனுராதபுரத்தைச் சேர்ந்த சிங்கள இளைஞர்கள் நால்வரை மடுவில் உள்ள மக்கள் நையப்புடைத்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) மதியம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மன்னார், மடு, பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் உள்ள வீடுகளிற்கு சென்று ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி திரட்டுவதாக கூறி, சில தமிழ் மக்களை மிரட்டியும் நிதி வசூலித்துள்ளார்.

தாங்கள் அனுராதபுரம் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட சிங்கள இளைஞர்கள் நால்வரிலும் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் துரத்திப் பிடித்து நையப்புடைத்துள்ளனர்.

சம்பவத்தை அறிந்து அப்பிரதேசத்திற்குச் சென்ற அப்பகுதி கிராம அலுவலர் விசாரணைகளை மேற்கொண்டதுடன், மடு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், குறித்த இளைஞர்களுக்குச் சார்பாக நடந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © 1328 Mukadu · All rights reserved · designed by Speed IT net