இலங்கை மகாவலி அதிகார சபையின் எச் பிரிவின் அனுசரணையுடன் மக்களால் கையளிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் இன்று கிளிநொச்சியை வந்தடைந்தது.
கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்காக குறித்த வெள்ள நிவாரணம் விவசாயிகளால் இன்று மகாவலி அதிகார சபையினரின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டது.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய உள்நாட்டலுவ்கள் அமைச்சரின் பணிப்புரைக்கமைய குறித்த நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்ட இன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் மகேந்ர அபகேவர்த்தன அவர்களால் கிளிநாச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் குறித்த நிவாரண பொருட்கள் கையளிக்க்படப்டது.
ஏழு வாகனங்களில் எடுத்து வரப்பட்ட குறித்த நிவாரண பொருட்களை வழங்கிய விவசாயிகளிற்கு அரசாங்க அதிபர் இதன்போது நன்றி தெரிவித்ததுடன், மகாவலி அதிகார சபையின் பணிப்பாளரும் இதன்போது சிங்களத்தில் கருத்து தெரிவித்தார்.