கிண்ணியா பைசல் நகர் டிப்போ வீதியை புனரமைத்து தருமாறு கோரிக்கை!
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பைசல் நகர் டிப்போ வீதி போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த வீதியால் பாடசாலை செல்லும் மாணவர்கள் அரச ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் எனப்பலரும் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
வீதியால் பயணிப்பவர்கள் சேற்றுக்குள் விழுவதும், புதைந்து செல்வதையும் காணக்கூடிய தாகவுள்ளதாகவும்.
அடுத்த மழை காலம் ஏற்படுவதற்கு முன்னர் குறித்த வீதியை புனரமைத்தல் பயணிகளின் போக்குவரத்து சுலபமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இவ்வீதியின் நிலை தொடர்பாக பிரதேச மக்கள் நகர சபை உறுப்பினர்கள், நகர சபை தவிசாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சுட்டிக் காட்டியும் இதுவரை எந்தவிதமான முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் முன்னேடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

