யாழில் பூட்டிய அறைக்குள் தூக்கில் தொங்கிய யுவதி!

பூட்டிய அறைக்குள்ளிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் யாழ். அச்சுவேலி தெற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து குறித்த யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எனினும்,மேற்படி யுவதி தற்கொலை செய்து கொண்டமைக்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
யாழ்.அச்சுவேலி தெற்குப் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை யமீலா(வயது-24) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.