வவுனியாவில் போக்குவரத்துக்கு இடையூறாக தரித்து நிற்கும் வாகனங்கள்!

வவுனியாவில் போக்குவரத்துக்கு இடையூறாக தரித்து நிற்கும் வாகனங்கள்!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் தரித்து நிற்பதினால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான பாதையில் வாகனங்கள் தரித்து நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

எனினும், அதற்கு முன்பாகவே வாகனங்கள் தரித்து நிற்பதனை அவதானிக்க முடிகின்றது.

இதன் காரணமாக நோயாளிகளை குறித்த பாதையினூடாக அன்புலன்ஸ் வண்டியில் எடுத்து செல்ல முடியாத நிலையே தற்போது ஏற்பட்டுள்ளது.

வவுனியாவில் வாகன தரிப்பிடம் இன்மையே இதற்கு முழுக்காரணம் என அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

எனவே உரிய அதிகாரிகள் இவ்விடயத்தினை கவனத்தில் கொண்டு இதற்கு உரிய தீர்வினை பெற்றுத்தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net