மட்டக்களப்பில் புதிய ஆளுநரின் ஆதரவாளர்களால் நேர்ந்த பரிதாபம்!

மட்டக்களப்பில் புதிய ஆளுநரின் ஆதரவாளர்களால் ஐந்து மாடுகளுக்கு நேர்ந்த பரிதாபம்!

புதிய ஆளுநரின் பதவியேற்புக்காகச் சென்ற ஆதரவாளர்கள் தெருவில் நடமாடிய 5 மாடுகளை மோதிவிட்டு சென்றுள்ளதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்வபம் குறித்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் தியாவட்டவான் பிரதேசத்தில் வேன் மோதுண்டதில் தெருவில் நடமாடிய 5 மாடுகள் பலியாகியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திங்கட்கிழமை மாலை ஓட்டமாவடி பாலத்தை அண்மித்தாக தியாவட்டவான் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய ஆளுநரின் பதவியேற்புக்காகச் சென்றிருந்த ஆதரவாளர்கள் பயணித்த வேன் திருகோணமலையிலிருந்து காத்தான்குடி நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது தெருவில் நடமாடிய கட்டாக்காலி மாடுகள் மீது மோதியதிலேயே 5 மாடுகள் மாண்டு போய்யுள்ளதாக பொலிஸார் விசாரணையில் கூறியுள்ளனர்.

வேனின் முன் பக்கம் நொருங்கியுள்ளதுடன், மேலும் இவ்விபத்தில் சிக்கிய 14 வயதான பாடசாலை மாணவன் ஒருவனுக்கும் சிறு காயமடைந்த நிலையில் வைத்தியச்சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் பற்றி வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net