ரஜினி, அதிமுகவுடன் கூட்டணியா?

ரஜினி, அதிமுகவுடன் கூட்டணியா?

மக்களுடன் வைக்கும் கூட்டணி தான் வெற்றிகரமான கூட்டணி என இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூறி உள்ளார். பாரதிய ஜனதா கட்சி செயற்பாட்டாளர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸிங் வழியாக நேற்று உரையாற்றினார் நரேந்திர மோதி.

இதில் அரக்கோணம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர் மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பா.ஜ.க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அதில் அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் கேட்ட கூட்டணி குறித்த கேள்விக்கு கூட்டணிக்கான நமது கதவுகள் திறந்தே உள்ளன என பதில் அளித்து உள்ளார்.

ரஜினி, அதிமுக ஏன் திமுகவுடன் கூட பா.ஜ.க கூட்டணி வைக்க உள்ளது என்பது போன்ற செய்திகள் உலவுகின்றவே என்ற கேள்விக்கு மோதி சிரித்தப்படி பதில் அளிக்க தொடங்கினார்.

அவர், “இருபது ஆண்டுகளுக்கு முன்பு வாஜ்பேயி வெற்றிகரமான கூட்டணி அரசியலை முன்னெடுத்தார். அதுவரை காங்கிரஸ், மாநில கட்சிகளின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்காமல் இருந்தது.

அவர்களை மிக மோசமாக கூட நடத்தியது. திமிர்தனத்துடன் நடந்து கொண்டது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி மாநில கட்சிகளை மதித்தது” என்றார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net