இன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வீடுகள் அமைக்கும் பணி.

இன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வீடுகள் அமைக்கும் பணி.

வெள்ளத்தினால் சேதமடைந்த கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வீடுகளை அமைக்கும் பணி இன்று ஆரம்பமாகவுள்ளது.

இதுதொடர்பாக வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் எல்.எஸ்.பலன்சூரிய தெரிவிக்கையில்,

இதற்கான திட்டத்தின் கீழ் 500 புதிய வீடுகள் அமைக்கப்படவுள்ளன என்று தெரிவித்தார்.

புதிய உதாகம்மான வேலைத் திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை லுணுகம்வெஹரவில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சோபித நாஹிமிகம இன்று வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது என்றும் அவர் கூறினார்.

20 வீடுகளைக் கொண்ட இந்த கிராமத்தில் நீர் மின்சாரம் உட்கட்டமைப்பு போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஹம்பாந்தோட்ட அங்குனுகொலபெலஸ சூரியபொக்குணவில் அமைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டம் நாளை மக்களிடம் கையளிக்கப்படவுள்ளமை குறறிப்பிடத்தக்கது.

அரச தகவல் திணைக்களம்

Copyright © 8630 Mukadu · All rights reserved · designed by Speed IT net