கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்தில் அங்கஜன் இராமநாதன் தலமையில் துப்பரவு பணிகள்
கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பன்னங்கண்டி பிரதேசத்தில் இன்று அங்கஜன் இராமநாதனை தலமையாக கொண்ட சிறிலங்கா சுதந்திர கட்சி இளைஞர் அணியினரால் துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இன்று காலை குறித்த துப்பரவாக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. பன்னங்கண்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை உள்ளிட்ட பொது இடங்கள் இவ்வாறு துப்பரவு செய்யப்பட்டன.
கிளிநொச்சி யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து இளைஞர் யுவதிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பாடசாலை வளாகம், பாடசாலை கட்டடங்களிற்கு வர்ணம் பூசுவதற்கான ஏற்பாடுகளை இதன்போது இளைஞர்கள் முன்னெடுத்தனர்.
பிரதேச ரீதியாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக குறித்த பகுதியில் குறித்த பணி முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை நாளை தென்னிலங்கையிலிருந்து நாமல் ராஜாபக்ச தலமையிலான குழுவினர் குறித்த பகுதிக்க வருகை தர உள்ளனர்.
குறித்த பாடசாலை கட்டடத்திற்கு வர்ணம் பூசி மாணவர்களிற்கு கையளிக்கப்படவுள்ளதுடன், பாடசாலை மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்களும் கையளிக்கப்பட உள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் குறித்த ஏற்பாடு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.






































