கடவுச்சீட்டு பெற போலி ஆவணங்கள்: 13 பேர் கொண்ட கும்பல் கைது!

கடவுச்சீட்டு பெற போலி ஆவணங்கள்: 13 பேர் கொண்ட கும்பல் கைது!

கடவுச்சீட்டு பெறுவதற்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த 10 பேர் கொண்ட கும்பலை சென்னை குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல விரும்பும் நபர்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுக்கும் கும்பல் ஒன்று குறித்துபொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சென்னையைச் சேர்ந்த 10 பேரும், டெல்லி, மும்பை, உத்தரகாண்ட மாநிலங்களைச் சேர்ந்த மூவர் என மொத்தமாக 13 பேரை கைது செய்த சென்னை குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸார் இவர்களை தடுத்துவைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 155 கடவுச்சீட்டுக்கள் மற்றும் 18 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net